விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 01st April 2019 07:57 AM | Last Updated : 01st April 2019 07:57 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் அருகேயுள்ள லெட்சுமாங்குடி கம்பர் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி கம்பர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகனகாங்கித மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் தனிசன்னிதியாக விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் மீது இருந்த கலசம் கஜா புயலின்போது சாய்ந்தது. இக்கோயில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கஜா புயலில் கலசம் விழுந்துள்ளதால் ஆகம விதிப்படி மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில், புனிதநீர் கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, பரிகாரத்துடன் பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹீதி நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.