பன்றிக்கறி சம்பவம்: தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
By DIN | Published On : 11th April 2019 07:30 AM | Last Updated : 11th April 2019 07:30 AM | அ+அ அ- |

அசாமில் முஸ்லிம் முதியவரை தாக்கி பன்றிக்கறி உண்ண வைத்த சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஜே. அனஸ் நபீல் வெளியிட்ட அறிக்கை: அசாம் மாநிலம் பிஸ்வனாத் சார்யாலி பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவரின் கடைக்குள் ஒருதரப்பினர் புகுந்து, மாட்டிறைச்சி விற்பதாக கூறி அவரைத் தாக்கி, பன்றிக் கறியை கொடுத்து சாப்பிட கட்டாயப்படுத்தியுள்ளனர். அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கோ, விற்பதற்கோ தடை கிடையாது. இருப்பினும், சவுகத் அலியை தாக்கி பன்றிக்கறி உண்ண கட்டாயப்படுத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.