தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியினர்...
By DIN | Published On : 17th April 2019 01:15 AM | Last Updated : 17th April 2019 01:15 AM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியாகும். இத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்துக்கு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆதரவு திரட்டினர்.
இதேபோல், தஞ்சை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.
இதேபோன்று, அமமுக வேட்பாளர் பொன்.முருகேசனுக்கு அக்கட்சியினர் ஆதரவு திரட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...