மன்னார்குடியில் திமுக கூட்டணிக் கட்சியினர்...
By DIN | Published On : 17th April 2019 01:15 AM | Last Updated : 17th April 2019 01:15 AM | அ+அ அ- |

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தை ஆதரித்து, மன்னார்குடியில் திமுக கூட்டணி கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் சித்தமல்லி
ந. சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
இதில், மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திமுக மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், நகரச் செயலர் வீரா. கணேசன், முன்னாள் நகரச் செயலர் ராஜ. பூபாலன், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன், தி.க. மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் வி. கலைச்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர்
கலந்துகொண்டனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரமாக, தேரடி காந்தி சிலையிலிருந்து திமுக கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரித்தப்பட்டி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக,பிரசாரக் கூட்டம் நடைபெற்ற மேலராஜவீதி பெரியார் சிலை உள்ள இடத்துக்கு வந்தனர். தேர்தல் ஆணையம் உத்தரவின் படி மாலை 6 மணிக்கு பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...