சுவரில் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் சாவு
By DIN | Published On : 26th April 2019 01:17 AM | Last Updated : 26th April 2019 01:17 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டியில் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி பொன்னையன் செட்டித் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாரதி (எ) அரவிந்தன் (20) டிப்ளமோ முடித்துவிட்டு வெளிநாடு செல்ல இருந்தார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் கடைத் தெரு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, திருத்துறைப்பூண்டி- நாகை சாலை பவுண்டடி தெரு வளைவில், ஒரு மாடி வீட்டின் வெளிப்புறச் சுவரில் மோதி, நிகழ்விடத்திலேயே அரவிந்தன் உயிரிழந்தார். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்
பதிந்துள்ளனர்.