தென்னை மரத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு
By DIN | Published On : 26th April 2019 01:17 AM | Last Updated : 26th April 2019 01:17 AM | அ+அ அ- |

நன்னிலத்தில் தென்னை மரத்தில் தீப்பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நன்னிலம் பேரூராட்சியின் கிழக்குப் பகுதியில் தச்சங்குளம் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் வியாழக்கிழமை மாலை யாரோ சிலர் தீ வைத்துவிட்டனர். இதனால், அந்த குப்பை கொழுந்துவிட்டு எரிந்து, அருகிலிருந்த தென்னை மரத்திலும் தீ பரவியது. தகவலறிந்து வந்த நன்னிலம் தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், குடிசைகள் நிறைந்த அந்த பகுதியில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.