புயலை எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

புயல், மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.


புயல், மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வியாழக்கிழமை நடைபெற்ற மழை, புயல் முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் நிலையில் அனைத்துத் துறையினரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு புயுல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை சம்பந்தப்பட்ட துறையினர் அறிவிப்பு செய்ய
வேண்டும். 
நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் இதர வசதிகள் இருப்பது உறுதி செய்ய வேண்டும். கால்நடைத்துறையினர் கால்நடை மருத்துவர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தேவையான இடங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும்  சிறு பாலங்கள் மற்றும் பெரிய பாலங்கள் உள்ள குழாய்களில் தண்ணீர் தடையின்றி செல்ல சுத்தம் செய்து  வைத்திருக்க வேண்டும். 
 நிவாரண முகாம்களில் போதுமான மின் வசதி செய்ய ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். புயலால் விழுந்த மரங்களை அகற்ற, போதுமான மரம் அறுக்கும் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான பகுதிக்கு, பாதுகாப்பான வகையில் கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, காவல் துறை, ஊர்க்காவல் படை, மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். முதல் நிலை பொறுப்பாளர் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள் கொண்ட குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் போதுமான மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் மின் வசதிக்கு ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ய வேண்டும். 
24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறைகளில் அமைக்க வேண்டும். மின் துறையினர், தேவை ஏற்படும்பட்சத்தில் பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்து மின்சாரத்தைத் துண்டிப்பு செய்ய வேண்டும். தகவல் பரிமாற்றத்துக்கு அவசியமான வயர்லெஸ் கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.
 கூட்டத்தில், காவல் துறை கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திட்ட இயக்குநர் தெய்வநாயகி, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com