ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் தீர்த்தவாரி
By DIN | Published On : 04th August 2019 01:04 AM | Last Updated : 04th August 2019 01:04 AM | அ+அ அ- |

நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயிலில் ஆடித் தீர்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா நிகழாண்டும் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. இதன் ஒருபகுதியாக ஆடிப்பெருக்கு நாளான சனிக்கிழமை மங்களாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தீர்த்தவாரிக்கு காவிரியின் கிளை ஆறான புத்தாறுக்கு எழுந்தருளினார்.
பின்னர், அங்கு காலை 11 மணியளவில் மங்களாம்பிகை அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். புத்தாறில் தண்ணீர் வராத காரணத்தினால் பெரிய அண்டாவில் தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் தீர்த்தவாரி நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...