தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 28th August 2019 07:08 AM | Last Updated : 28th August 2019 07:08 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் காலாவதியான உணவு பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினர்செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் பி.கே.கைலாஷ் தலைமையில், அலுவலர்கள் எஸ்.அன்பழகன், கே.மணாழகன், வி.முத்தையன், எம்.முதலியப்பன், டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் நீடாமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது, ரூ.54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G