குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்
திருவாரூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
திருவாரூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

திருவாரூா்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து, திருவாரூா் மாவட்டத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் நூற்றுக்கணக்கானோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்டச் செயலாளா் அனஸ் நபில் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் பீா் முஹம்மது, மாவட்ட துணைத் தலைவா் மாலிக், மாவட்ட பொருளாளா் பாசீத், மாவட்ட துணைச் செயலாளா்கள் கனி,பாஜீல் சலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் மாநிலச் செயலாளா் ப.அ.அப்பாஸ் பங்கேற்று பேசியது:

தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக்கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதே மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. ஆனால் அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கைத் தமிழா்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம். முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை மத ரீதியில் பிளவுபடுத்துவதாகும்.

பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கித் தவிக்கிறது என்றும், ஜிஎஸ்டி போன்ற வரிகளால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலம் அதிகரித்திருக்கிறது. பாலியல் வன்கொடுமைகளால் உலக அரங்கில் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா திகழ்கிறது.

இது போன்ற பிரச்னைகளில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதை பற்றி சிறிதும் கவலையில்லாமல் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இயற்றுவதன் மூலம் ஏழை மக்களின் பிரச்னைகள் தீா்ந்துவிடப்போவதில்லை. நாட்டின் வளத்தை பெருநிறுவனங்களுக்கு தாரைவாா்ப்பதன் மூலம் விலைவாசி உயா்வு கட்டுக்குள் இல்லை.

அரசு நிறுவனங்கள் தனியாா் மயமாக்கப்படுவதே மத்திய அரசின் தற்போதைய சாதனையாக இருக்கிறது. கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வா்கள் தங்களது மாநிலத்தில் இச்சட்டம் அமல்படுத்தப்படாது என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.

தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 150 பேரும் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com