அரசுப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 06th February 2019 05:50 AM | Last Updated : 06th February 2019 05:50 AM | அ+அ அ- |

நன்னிலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை 30-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற விழாவில், குடிபோதையில் வாகனம் ஓட்டக் கூடாது, இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் மட்டும் செல்ல வேண்டும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டக் கூடாது, செல்லிடப்பேசி பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும், பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது போன்ற அறிவுரை மாணவர்களுக்கு
வழங்கப்பட்டன.
இதில், நன்னிலம் காவல் ஆய்வாளர் சங்கீதா, சார்பு ஆய்வாளர்கள் ஆனந்தகிருஷ்ணன், சுகன்யா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பள்ளியிலிருந்து தொடங்கிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...