உதவித்தொகை: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 12th February 2019 09:07 AM | Last Updated : 12th February 2019 09:07 AM | அ+அ அ- |

கல்வி உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கல்லூரியில் கழிவறை, விளையாட்டு மைதானம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிளை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகையைத் தாமதப்படுத்தாமல், உடனடியாக வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் கஜா புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பப்பட்டது.
மாணவர் பெருமன்ற நிர்வாகி வி. சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜெ.பி. வீரபாண்டியன், மாவட்டச் செயலர் சு. பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.ஜே. பாரதி, கல்லூரியின் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கிஷோர், ஆர். ஹரிகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.