பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி
By DIN | Published On : 12th February 2019 09:10 AM | Last Updated : 12th February 2019 09:10 AM | அ+அ அ- |

மன்னார்குடியை அடுத்த மகாதேவப்பட்டனம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட குறுந்தகடுகளைப் பயன்படுத்தி, பொதுத் தேர்வை எழுதுவது குறித்த விளக்கங்களை அளித்ததோடு, தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்தார். நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.
பயிற்சி வகுப்பு நடைபெற்றபோது, அப்பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட மாவட்டக் கல்வி அலுவலர் விஜயா, பொதுத்தேர்வு நெருங்கிவிட்டதால் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள வகையில் செலவழிக்குமாறு மாணவர்களை அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சோமசுந்தரம், கார்த்திகேயன், இன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.