இராபியம்மாள் கல்லூரி வணிகவரித் துறை கருத்தரங்கம்
By DIN | Published On : 04th January 2019 08:27 AM | Last Updated : 04th January 2019 08:27 AM | அ+அ அ- |

திருவாரூரில் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். சிங்கப்பூர் பட்டயக் கணக்காளர் எம்.ஏ. காதர் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பட்டயக் கணக்காளராவதற்கு தயார் செய்வது எப்படி என்ற தலைப்பில் பேசினார். இதில் வணிகவியல் துறைத் தலைவர் ஜி. ராமநாதன், பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.