புயல் பாதித்த மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்
By DIN | Published On : 04th January 2019 08:30 AM | Last Updated : 04th January 2019 08:30 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
முன்னாள் விமானப்படை வீரர்கள், நாசிக் தமிழ்ச் சங்கம், காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம், என்ரூட் குழுமம் ஆகியவை சார்பில், முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்க தஞ்சை மண்டல தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராஜ்மோகன், மூர்த்தி, பாலசுப்பிரமணியன், சர்க்கரை முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மீனவர்களுக்கு மண்டல துணைத் தலைவர் ஜெயக்குமார் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை வழங்கினார்.
இதேபோல், ஜாம்பவானோடை கிராமத்திலும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், மீனவர் சங்க நிர்வாகிகள் கருணாநிதி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...