குரு பகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 04th January 2019 08:28 AM | Last Updated : 04th January 2019 08:28 AM | அ+அ அ- |

நவகிரக தலங்களில் ஒன்றாக போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில், வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குரு பகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, துர்கையம்மன், உத்ஸவர் தெட்சிணாமூர்த்தி, சுக்கிரவார அம்மன், சனீசுவர பகவான் உள்ளிட்ட சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குரு பகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...