மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியூசி) வலியுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநாடு, மன்னார்குடி பந்தலடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் அ. காந்தி தலைமை வகித்தார்.
தீர்மானங்கள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்; மதுவிலக்கை நடைமுறைப்படுத்தம்போது பணியிழக்கும் டாஸ்மாக் ஊழியர்களை அரசின் பிறத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் பணி மூப்பு மற்றும் பணி தொடர்ச்சியுடன் நிரந்தரமாக நியமிக்க வேண்டும்; டாஸ்மாக் கடையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்; மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; தாக்குதல், திருட்டு, கொள்ளைச் சம்பவங்களிலிருந்து பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 முன்னதாக ஏஐடியுசி சங்க கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம் ஏற்றிவைத்தார். வேலை அறிக்கையை சங்க மாவட்டச் செயலாளர் கே. ராமச்சந்திரனும், வரவு- செலவு அறிக்கையை மாவட்டப் பொருளாளர் என். பாரதிமோகனும் தாக்கல் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
 புதிய நிர்வாகிகள் தேர்வு: இம்மாநாட்டில், டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துக்குப் புதிய மாவட்டத் தலைவராக பி.டி.லெனின், மாவட்டச் செயலாளராக கே. ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளராக சி. சத்தியானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 இதில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர். சந்திரசேகர ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் வி. கலைச்செல்வன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வீரமணி, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், டி.என்.சி.எஸ்.சி.தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி பி.நாகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com