ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயிலில் சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம்: ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் பங்கேற்பு

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி கோயிலுக்கு
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரீ சங்கடஹர ஸ்ரீ மங்கள மாருதி கோயிலுக்கு சாதுர்மாஸ்ய விரதானுஷ்டத்தை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 
இக்கோயிலில் அதன் ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி,  33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் சஞ்சீவி மூலிகையுடன் அருள்பாலிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 108 அடி உயர பஞ்சதள விமானம், ஆஞ்சநேயர் சன்னிதி முன் கர்ப்பக்கிரக அர்த்த மண்டபம், லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார், வராகமூர்த்தி, ஹயக்ரீவர் சன்னிதிகள், 7 நிலை ராஜகோபுரம், புஷ்கரணி, அன்னதான மண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் இக்கோயிலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் விஜயம் செய்து, திருப்பணிகளை பார்வையிட்டு, இப்பணிகளை விரைவில் நிறைவுசெய்து, கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செய்யும்படி அருளாசி வழங்கினார். மேலும், சாதுர்மாஸ்ய விரதானுஷ்டானம் செய்யவும் அருளாசி கூறினார். 
அதன்படி, ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா ஸ்வாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வருகை தந்தார். அவருக்கு, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, ஸ்தாபகர் ரமணி அண்ணா தலைமையில் பூர்ண கும்ப மரியாதை அளித்து, வரவேற்பு அளித்தனர். 
தொடர்ந்து, ஸ்ரீசங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீ கோதண்டராமர் சன்னதிகளில் மகா ஸ்வாமிகள் வழிபட்டார். பின்னர், அவரது முன்னிலையில் பாதுகா பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சகடபுரம் மடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமெளலீஸ்வரர், அறங்காவலர்கள் ஜெகன், ராகவன், கி. வெங்கட்ராமன் மற்றும் திருமடத்தின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தொடர்ந்து, செப்டம்பர் 13-ஆம் தேதி வரை மகா ஸ்வாமிகள் இக்கோயிலில் சாதுர்மாஸ்ய விரதானுஷ்டம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸ்ரீ ஜகத்குரு சாதுர்மாஸ்ய விரத சேவா ஸமிதி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com