ஜூன் 28-இல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 14th June 2019 07:37 AM | Last Updated : 14th June 2019 07:37 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 28 -ஆம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட
ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் 28 -ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் கருவூல அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைகள் எதுவும் இருந்தால் அது தொடர்பான மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவாரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில், பெயர், முகவரி (தொலைபேசி, செல்லிடப்பேசி எண்ணுடன்), ஓய்வூதிய கொடுவை எண் (ஓய்வூதியப் புத்தக எண்), இறுதியாகப் பணியாற்றிய அலுவலகம் மற்றும் பதவி, ஓய்வுபெற்ற நாள், ஓய்வூதியரின் கோரிக்கை, எந்த அலுவலரிடம் எவ்வளவு நாள்களாக நிலுவை, ஓய்வூதியம் பெறுபவராயின் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தின் பெயர் போன்ற விவரங்களுடன் (இரட்டைப் பிரதிகளில்) ஜூன் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு வரும் மனுக்கள் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்க இயலும்.
வெளிமாவட்டங்களில் உள்ள கருவூல அலுவலகங்கள் மூலமாக ஓய்வூதியம் பெறுவோர் தொடர்புடைய மாவட்டத்தில் நடைபெறும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தின் வழி தீர்வு காணும் வகையில், மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் தங்களது விண்ணப்பத்தை திருவாரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பாமல் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.