பள்ளிக் கட்டடத் திறப்பு விழா
By DIN | Published On : 14th June 2019 07:36 AM | Last Updated : 14th June 2019 07:36 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அபிஷேக கட்டளை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி நபார்டு வங்கி திட்டத்தில் குடிநீர் , கழிப்பறை, 8 வகுப்பறைகள் கொண்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தி ரூ. 1. 28 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய கட்டடத்தை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூசனகுமார் திறந்து வைத்தார். வட்டாட்சியர் ராஜன்பாபு முன்னிலை வகித்தார். இதில், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியர் சக்திவேல், தாட்கோ உதவி செயற்பொறியாளர்கள் உதயராமன் (திருவாரூர்), செல்வராஜ் (தஞ்சை) பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அஞ்சலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.