கால் முறிவு ஏற்பட்டவருக்கு மருத்துவ உதவி
By DIN | Published On : 14th June 2019 07:35 AM | Last Updated : 14th June 2019 07:35 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் கடைத் தெருவில் கால் முறிந்து சிகிச்சை பெற வசதியில்லாத இளைஞர் ஒருவருக்கு பொன்னாச்சி பொது சேவை மையம் சார்பில் வியாழக்கிழமை மருத்துவ உதவி செய்யப்பட்டது.
கூத்தாநல்லூர் பகுதியில், நன்கொடையாளர்களின் உதவியோடு, ரமலான் மாதத்தில் இலவச சஹர் உணவு, மருத்துவ உதவி இல்லாமல் தவிக்கும் ஏழ்மையானவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது, கல்விக் கடன் உள்ளிட்ட அரசு உதவிகள் பெற்றுத்தருவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொன்னாச்சி பொது சேவை மையம் செய்து வருகிறது.
இந்நிலையில், கூத்தாநல்லூர் அருகேயுள்ள பாண்டுக்குடியைச் சேர்ந்த நூர்முஹம்மது என்பவருக்கு கால் முறிந்து மேல் சிகிச்சைக்கு மருத்துவ வசதியில்லாமல், சிறுநீர் வெளியேற முடியாமல், வயிறு உப்பிய நிலையில் லெட்சுமாங்குடி கடைத் தெருவில் 2 நாள்களாக அவதிபட்டுவந்தாராம்.
இதுகுறித்து, தகவலறிந்த பொன்னாச்சி பொது சேவை மைய நிறுவனர் எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று நூர்முஹம்மதுவை பார்த்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துவிட்டு மருத்துவ உதவி செய்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...