வலங்கைமான் அருகே செவ்வாய்க்கிழமை வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்து வைக்கோல் எரிந்து சேதமடைந்தது.
வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சம்பா அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகிறது.
அறுவடைக்குப் பின் வைக்கோல் கால்நடைகளுக்கு தீவனத்துக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுர் தாலுக்கா பகுதிக்கு அதே பகுதியை சேர்ந்த லாரியின் உரிமையாளரும், ஓட்டுநருமான சந்திரன்(39) மற்றும் ஜெயகிருஷ்ணன்(24) ஆகியோர் கண்டியூர் பகுதியிலிருந்து லாரியில் செவ்வாய்க்கிழமை மதியம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வலங்கைமான் நோக்கி வந்தனர். அப்போது, வளையமாபுரம் பகுதியில் லாரி வந்த போது வைக்கோல் மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது.
குடியிருப்பு பகுதிஅருகே தீ விபத்து ஏற்பட்டதால் லாரி ஓட்டுநர் சந்திரன் சாமார்த்தியமாக லாரியை பலமீட்டர் தூரம் குடியிருப்புகளுக்கு அப்பால் உள்ள தரிசு வயல்களில் விட்டு தண்ணீர் உள்ள பகுதியில் லாரியை நிறுத்தினார். லாரியிலிருந்த வைக்கோல் கட்டுகள் சாலை மற்றும் தரிசு வயல்களில் விழுந்து எரிந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வலங்கைமான் தீயனைப்பு நிலைய வீரர்கள் லாரி எரியாமல் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.