சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 3- ஆவது நாளாக ஆய்வு
By DIN | Published On : 22nd March 2019 09:34 AM | Last Updated : 22nd March 2019 09:34 AM | அ+அ அ- |

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 3- ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆய்வு நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உலோகச் சிலைகள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் சுமார் 4,359 உலோகச் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 625 கோயில்களுக்குச் சொந்தமான சிலைகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகளை நீதிமன்ற உத்தரவுப்படி தொல்லியல் துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கெனவே 4 கட்டங்களாக ஆய்வு நடைபெற்ற நிலையில், 5- ஆம் கட்டமாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வைத் தொடங்கினர்.
இந்த ஆய்வின் மூலம் இதுவரை 3,800- க்கும் மேற்பட்ட சிலைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...