நடைபாலத்தை சரிசெய்த வட்டாட்சியருக்கு பாராட்டு
By DIN | Published On : 22nd March 2019 09:37 AM | Last Updated : 22nd March 2019 09:37 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் அருகே வாக்குச்சாவடி மையத்துக்குச் செல்லும் நடைபாலத்தை சரி செய்த வட்டாட்சியருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவையொட்டி, வாக்குச் சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து கூத்தாநல்லூர் வட்டாட்சியர் ஜி. மலக்கொடி தலைமையில், தேர்தல் பிரிவு தனித்துணை வட்டாட்சியர் வசுமதி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட கொத்தங்குடி, வடகோவனூர், தென் கோவனூர், திருராமேஸ்வரம், வேற்குடி, பூந்தாழங்குடி, கீழமணலி, பருத்தியூர், கண்கொடுத்தவணிதம், காவளூர், முகந்தனூர், மேலராதாநல்லூர், அத்திச்சேரமங்கலம் உள்ளிட்ட ஒன்றியப் பகுதிகளிலும், நகராட்சிப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பூந்தாழங்குடி - கீழமணலி வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய இணைப்புப் பாலம் முழுமையாகாமல் கிடப்பில் உள்ளதை அறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பாலப் பணிகள் முடிக்கப்பட்டன. இதற்கு, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் வட்டாட்சியரை பாராட்டினர். மேலும், கூத்தாநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள சிறிய குடிநீர் தொட்டிக்கு பதிலாக வாக்காளர்களுக்கு போதுமான அளவில் குடிநீர் கிடைக்கும் வகையில் பெரிய குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...