நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது.
இதையொட்டி, மார்ச் 23-ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்குமேல் 6 மணிக்குள் கொடியேற்றுதல் நடைபெறுகிறது. இதையடுத்து, நாள்தோறும் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து, மார்ச் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் பால்குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் கஞ்சி வார்த்தல், இரவு 7 மணிக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் ஆண்டுப் பிறப்பையொட்டி புஷ்ப்பல்லக்கு விழா நடைபெறவுள்ளது. அன்றிரவு மகாமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் டி. அரவிந்தன், செயல் அலுவலர் ரெ. அய்யப்பன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.