ஆங்கில இலக்கண திறனாய்வுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு
By DIN | Published On : 28th March 2019 06:16 AM | Last Updated : 28th March 2019 06:16 AM | அ+அ அ- |

ஆங்கில இலக்கண திறனாய்வுத் தேர்வில் மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்ற கூத்தாநல்லூர் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் நடத்தப்பட்ட ஆங்கில இலக்கணம் குறித்த திறனாய்வு தேர்வில் கூத்தாநல்லூர் லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 30 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு திருநெல்வேலி பாரத் ஆங்கிலப் பயிற்சியாளர்கள் அனுப்பிய வினா விடைகளுக்கான மாநில அளவிலான தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில், 5-ஆம் வகுப்பு மாணவர் எஸ். சரவணக்குமார், மாநில அளவில் 2-ஆம் இடமும், திருவாரூர் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் சரவணக்குமார் உள்ளிட்ட 30 மாணவர்களுக்கும் கூத்தாநல்லூர் லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளித் தாளாளர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர் உள்ளிட்டோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...