காங்கிரஸ் கட்சியில் இணைந்த தமாகாவினர்
By DIN | Published On : 28th March 2019 06:19 AM | Last Updated : 28th March 2019 06:19 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் தமாகாவிலிருந்து விலகி புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
17-ஆவது மக்களவைத் தேர்தலையடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவில் கூட்டணி அமைத்து தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கூத்தாநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் எஸ்.ஜாபர் அலி மற்றும் ஜெகபர்சாதிக், கூலான் ஜெகபர் சாதிக் உள்ளிட்டோர், கூத்தாநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் எம். சாம்பசிவம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சியின்போது, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியின் பொறுப்பாளர் எஸ்.எம். சமீர், அப்துல் அலீம் உள்ளிட்டோர் இருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...