எமனேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 05th May 2019 01:33 AM | Last Updated : 05th May 2019 01:33 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேசுவரி சமேத எமனேசுவரர் கோயிலில் சனிக்கிழமை அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு, எமனேசுவரி சமேத எமனேசுவரர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிதுர் தர்ப்பணங்களை செய்து வழிபட்டனர்.
இதேபோல், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கள மாருதி 32 அடி உயர ஆஞ்சநேயர், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் எழுந்தருளியுள்ள விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.