திருவாரூர் அருகே பூச்சிமருந்து குடித்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மூலங்குடி, பண்டாரவடைத் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ராகுல் (19). மதுப்பழக்கத்தின் காரணமாக இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்ததாம். இந்நிலையில், ஏப்ரல் 27- ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே, வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துவிட்டாராம். அருகிலிருந்தவர்கள் ராகுலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா அளித்த புகாரின்பேரில், குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.