குழந்தைகள் இல்ல பொறுப்பாளர்களுக்கு சமுதாயப் பொறுப்புணர்வு அவசியம்

குழந்தைகள் இல்ல பொறுப்பாளர்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் குழந்தைகளை அணுக வேண்டும் என்று

குழந்தைகள் இல்ல பொறுப்பாளர்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் குழந்தைகளை அணுக வேண்டும் என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான எஸ். கோவிந்தராஜன் பேசினார்.
 திருவாரூரில் செவ்வாய்க்கிழமை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பராமரிப்பு இல்லப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சிக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது: குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களின் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும், குழந்தைகளிடம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பழகும்போது கவனமுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஆற்றுப்படுத்தும் (கவுன்சிலிங்) வகையில் பழக வேண்டும். அரசு மற்றும் தனியார்களிடம் இருந்து வரும் உதவித்தொகைகளுக்கு, முறையாக கணக்கு வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட இல்லப் பொறுப்பாளர்களே பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் 18 வயது வரை, பள்ளியில் சேர்த்து கல்வி கற்பிக்க, இல்லப் பொறுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக குழந்தைகள் இல்லங்களில் பணியாற்றுவோர் சமுதாயப் பொறுப்புணர்வுடனும், மனித நேயத்துடனும் குழந்தைகளை அணுக வேண்டும் என்றார் சார்பு நீதிபதி எஸ். கோவிந்தராஜன்.
 இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் பெ. செல்வராஜ், குழந்தைகள் இல்லங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ப. உதயகுமார், குழந்தைகள் உளவியல் குறித்தும், குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சி. ஜீவானந்தம், குழந்தைகள் உரிமைகள் குறித்தும் பேசினர். பயிற்சியில், இல்லங்களில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர்கள், ஆற்றுப்படுத்துநர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com