பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வுத் தொகை பெற அணுகலாம்
By DIN | Published On : 15th May 2019 08:47 AM | Last Updated : 15th May 2019 08:47 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை (பழைய) பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.1500-க்கு வைப்புத்தொகை பத்திரம் பெற்ற 18 வயது நிறைவடைந்த பயனாளிகள், முதிர்வுத் தொகை பெற வைப்புத்தொகை பத்திரம் (அசல்), ஆதார் அட்டை நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், வங்கிக் கணக்குப் புத்தக முகப்பு நகல் மற்றும் 2 மார்பளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டட வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04366- 224280 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.