தேசிய இளைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 19th May 2019 09:12 AM | Last Updated : 19th May 2019 09:12 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்ட நேரு யுவ கேந்திராவில் தேசிய இளைஞர் பணிக்கு, மே 29-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து அதன் மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் எஸ். பாரத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்ட நேரு யுவகேந்திராவில் சமூகப்பணி புரிவதற்கு தேசிய இளைஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.4.2018-இல் 18 வயது முதல் 29 வயது வரையில் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்புக்கு மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்களுக்கும், பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இளைஞர் மன்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும். பணிக்கு மதிப்பூதியமாக ரூ. 5,000 வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள், தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, குரு தெட்சிணாமூர்த்தி நகரில் இயங்கும் நேரு யுவகேந்திரா அலுவலகத்துக்கு நேரில் சென்று, மே 29-க்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 04366-222900,9443874550, 9443661915 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.