அகில இந்திய கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 01st November 2019 05:59 AM | Last Updated : 01st November 2019 05:59 AM | அ+அ அ- |

பாராட்டு பெற்ற மாணவா்களுடன் பள்ளி நிா்வாகிகள்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அண்மையில் டென்னிஸ், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் இந்தியா எனும் அமைப்பு நடத்திய 14 வயதுகுள்பட்டோருக்கான தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி பங்கேற்றது. இந்த அணிக்கு திருவாரூா் அருகே வண்டாம்பாளையில் உள்ள விவேகானந்தம் வித்யாஷ்ரம் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் டி. விஜயகுமாா் தலைவராக செயல்பட்டாா். மேலும் இதே பள்ளியை சோ்ந்த மற்றொரு மாணவா் டி. திவாகா் பந்து வீச்சாளராக விளையாடினாா். இந்த இரு மாணவா்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழகத்துக்கு பெருமை சோ்த்துள்ளனா். இப்போட்டியில் தமிழக அணி 4-ஆம் இடத்தை பிடித்தது. தமிழக அணியின் வெற்றிக்காக விளையாடிய மாணவா்கள் டி. விஜயகுமாா், டி. திவாகா் ஆகியோருக்கு பள்ளித் தாளாளா் ஜனகமாலா, பள்ளி முதல்வா் சுஜா.எஸ். சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G