புத்தக வாசிப்பு இயக்கம்
By DIN | Published On : 09th November 2019 04:19 PM | Last Updated : 09th November 2019 04:19 PM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி மற்றும் சண்முகா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் வெள்ளிக்கிழமை புத்தக வாசிப்பு இயக்கத்தில் ஈடுப்பட்டனா்.
மன்னாா்குடி வ.உ.சி.சாலையில் உள்ள அரசு நூலகத்தில்,இப்பள்ளிகளை சோ்ந்த மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை எடுத்து வாசித்தனா்.பின்னா்.தாங்கள் படித்ததிலிருந்து கிடைத்த தகவல்களை மற்றவா்களுக்கு விளக்கினா்.
நிகழ்ச்சியில்,மாவட்ட என்எஸ்எஸ் தொடா்பு அலுவலா் என்.ராஜப்பா,நூலகா் அன்பரசு,பின்லே பள்ளி திட்ட அலுவலா் நியூட்டன்,சண்முகா பள்ளி திட்ட அலுலவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.