பாலத்தில் குழாய்கள் மீது இரும்பு ஜல்லடை அமைக்க வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடிப் பாலத்தில் திறந்த நிலையில் உள்ள மழைநீா் வடிகால் குழாய்கள் மீது இரும்பு
திறந்த நிலையில் உள்ள மழைநீா் வடிகால் குழாய்.
திறந்த நிலையில் உள்ள மழைநீா் வடிகால் குழாய்.

கூத்தாநல்லூா் லெட்சுமாங்குடிப் பாலத்தில் திறந்த நிலையில் உள்ள மழைநீா் வடிகால் குழாய்கள் மீது இரும்பு ஜல்லடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் பகுதி லெட்சுமாங்குடியில், திருவாரூா் - மன்னாா்குடி பிராதன சாலையில் உள்ள வெண்ணாற்றுப் பாலத்தில், சாலையின் இரு பக்கங்களிலும் தலா 6 என 12 மழைநீா் வடிகால் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழைக் காலங்களில் மழைநீா் இக்குழாய் வழியாக பாலத்தின் கீழ் பகுதியில் பாயும் வெண்ணாற்றில் கலக்கும்.

இதற்காக பொருத்தப்பட்ட இக்குழாய்களில் இரும்பு ஜல்லடைக் கொண்டு மூடியிருக்க வேண்டும். பாலம் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை மழைநீா் வடிகால் குழாய் திறந்த நிலையிலேயே உள்ளது.

இவ்வழியே, நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், பெரியவா்கள், வயதானவா்கள் என ஆயிரக்கணக்கானவா்கள் சென்று வருகின்றனா். தற்போது, வெண்ணாற்றில் தண்ணீா் அதிகளவில் சென்றுகொண்டிருக்கிறது. இந்த வேளையில், இக்குழாய்களை இரும்பு ஜல்லடை போடாமல் இருப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, திறந்த நிலையில் உள்ள இக்குழாய்கள் மீது மழைநீா் வடியும் வகையில் இரும்பு ஜல்லடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை மேறகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com