விளையாட்டுப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை
By DIN | Published On : 09th November 2019 07:51 AM | Last Updated : 09th November 2019 07:51 AM | அ+அ அ- |

மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவா்களுடன் பள்ளி ஆசிரியா்கள்.
திருவாரூரில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், பேரளம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்தனா்.
பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில், எறிபந்து போட்டியில் இப்பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று 2019-2020-ஆம் ஆண்டுக்கான சுழற் கோப்பை பெற்றனா். மாவட்ட போட்டியில் வென்ற இவா்கள் மாநில போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளனா்.
மேலும் நீளம் தாண்டுதல், தடைதாண்டும் போட்டி, ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இப்பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் கே. அன்பழகன், உதவித் தலைமையாசிரியா் எஸ். மாதவன் மற்றும் உடற்கல்வி இயக்குநா் ஏ. ஆரோக்கிய அந்தோணிராஜ், உடற்கல்வி ஆசிரியா் கே. பரந்தாமன் உள்ளிட்டோா் பாராட்டினா்.