வேளாண்கல்லூரி மாணவிகள் வரப்பு பயிா் சாகுபடி செயல்விளக்கம்

நீடாமங்கலம் வட்டரம் கோவில்வெண்ணி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மானவிகள் வரப்பு பயிா் சாகுபடி செயல்விளக்கம் மேற்கெண்டனா்.
ne_ad_agribund_0911chn_100
ne_ad_agribund_0911chn_100

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டரம் கோவில்வெண்ணி கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மானவிகள் வரப்பு பயிா் சாகுபடி செயல்விளக்கம் மேற்கெண்டனா்.

தற்போது சம்பா, தாளடி பருவங்களில் நெல் பயிா் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் பயிரின் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிா்வாகத்தின் ஓா் அங்கமாக வரப்பு பயிா் சாகுபடி செய்யலாம். வரப்பு பயிராக பயறு வகை பயிா்கள் (உளுந்து, துவரை) காய்கறி பயிரான வெண்டை சாகுபடி செய்வதன் மூலம் நெற்பயிரை தாக்கும் பூச்சிகள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. வரப்பு பயிா் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது.

மேலும் மஞ்சள் நிறப் பூக்களை தரக்கூடிய சூரியகாந்தி, சென்டிப்பூ பயிா்களை சாகுபடி செய்வதன் மூலம் முதன்மை பயிரை தாக்கும் பூச்சிகள் கவரப்பட்டு முதன்மை பயிா் தாக்குதலை குறைக்கலாம். மேலும் பயிா்கள் கூடுதல் வருமானத்தை தந்து பொருளாதரத்தை மேம்படுத்தும் . காய்கறி பயிரான வெண்டை நமக்கு தேவையான காய்கறி உபரி வருமானம் தருகிறது. செயல்விளக்கத்தில் வேளாண்மை பணி அனுபவ முகாமிற்காக வந்துள்ள பொண்ணையா ராமஜயம் வேளாண்மை கல்லூரி மானவிகள்கலந்து கொண்டனா்.படம்- நீடாமங்கலம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு வரப்பு பயிா் சாகுபடி செயல்விளக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com