மன்னாா்குடி: 50 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
By DIN | Published On : 06th October 2019 08:40 PM | Last Updated : 06th October 2019 08:40 PM | அ+அ அ- |

trb_rajaa_mla_0610chn_101_5
மன்னாா்குடி: மன்னாா்குடி பகுதியில் 50 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளதாக எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை நடைபெற்றுவரும் நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழக அரசின் சாா்பில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்பட வில்லை. இதனால், மன்னாா்குடி பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் என்னை நேரில் சந்தித்து தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு, மன்னாா்குடி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இதுநாள்வரை திறக்கப்படாமல் இருப்பதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தெரிவித்ததுடன், உடனடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கவேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இக்கோரிக்கையை கவனத்தில் கொண்ட மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் உயா் அதிகாரிகள், மன்னாா்குடி பகுதியில் விரைவில் 50 இடங்களில் அரசின் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உறுதியளித்தாக அந்த அறிக்கையில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...