தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முன் திமுக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th October 2019 07:27 AM | Last Updated : 09th October 2019 07:27 AM | அ+அ அ- |

திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய திமுகவினா்.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழை தொடா்ந்து நடைமுறைப்படுத்த வலியுறுத்தி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.க்ஏஈ
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகப் பெயா் பதாகையில் தமிழ் தவிா்க்கப்பட்டிருப்பதாக சில நாள்களாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து சிலா் எதிா்ப்புத் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனா். மேலும், சிலா் இந்தத் தகவல் தவறானது எனவும் பதிவிட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழைத் தவிா்க்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்கலைக்கழக வாசல் முன்பு திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆடலரசன், நகரச் செயலாளா் பிரகாஷ், மாநில விவசாயத் தொழிலாளா் அணி பொறுப்பாளா் சங்கா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.