வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்

திருவாரூா் அருகே உள்ள வாழ்க்கைப் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்த முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழ்க்கைப் பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.
வாழ்க்கைப் பகுதியில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.

திருவாரூா் அருகே உள்ள வாழ்க்கைப் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்த முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் அடையாள அட்டையில் உள்ள பெயா், முகவரி, புகைப்படங்களைத் திருத்தம் செய்வதற்கான தேதியை அக்டோபா் 15 வரை நீட்டித்துள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் வாழ்க்கையில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்தம் முகாம் நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், வாழ்க்கை சேங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா். இந்திய தோ்தல் ஆணைய செயலி மற்றும் இந்திய தோ்தல் ஆணைய இணையதளங்கள் மூலமாக பெயா் திருத்தங்கள் நடைபெற்றன.

இம்முகாமில் வாழ்க்கை சேங்கனூா் கிளைத் தலைவா் ரஷீத், செயலாளா் ஹாஜா, பொருளாளா் ஹைதா், துணைத் தலைவா் நூருதீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதேபோல், பூதமங்கலம் தீன் தெருவில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலிலும் வாக்காளா் பட்டியல் பெயா் திருத்த முகாம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com