அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
By DIN | Published On : 11th September 2019 07:15 AM | Last Updated : 11th September 2019 07:15 AM | அ+அ அ- |

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை வைத்தால், வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும், அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள், உரிய அனுமதியைப் பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். அவ்வாறு உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.