இன்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 11th September 2019 07:16 AM | Last Updated : 11th September 2019 07:16 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் கால்நடை மருந்தக வளாகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. ராமசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்ட கால்நடை விவசாயிகள் பயன்பெறும் வகையில், "கோமாரி நோய், கன்றுவீச்சு நோய்த் தடுப்பு மற்றும் செயற்கைமுறை கருவூட்டல்' நிகழ்ச்சி நீடாமங்கலம் கால்நடை மருந்தக வளாகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆடு, மாடு ஆகியவற்றுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும். இந்த வாய்ப்பை கால்நடை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.