குடிமராத்துப் பணி: ஆட்சியர் ஆய்வு
By DIN | Published On : 11th September 2019 07:10 AM | Last Updated : 11th September 2019 07:10 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கூத்தாநல்லூர் வட்டத்துக்கு உள்பட்ட பழையனூர், நாகங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அன்னமரசனார் வடிகால் வலது கரையில் உள்ள நாகங்குடி வடிகால் மதகு புதுப்பித்துக் கட்டுதல் மற்றும் நாகங்குடி வடிகால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் பார்வையிட்டார்.
தொடர்ந்து, குலமாணிக்கம் பகுதியில் ரூ.29.50 லட்சம் மதிப்பில் பெரியகுருவாடி வாய்க்கால் மற்றும் அமராவதி வடிகால் உள்ளிட்ட இடங்களில் தூர்வாரும் பணிகள், ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் கட்டுமானங்கள்,புனரமைத்தல், மறுகட்டுமானம் உள்ளிட்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
மேலும், விவசாயிகள் மற்றும் பாசனதாரர் சங்கத்தினரிடம் இப்பணிகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் கோவிந்தராஜ், அருண் கணேஷ், சிதம்பரநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.