ஜேசிஐ வார விழா தொடக்கம்
By DIN | Published On : 11th September 2019 07:13 AM | Last Updated : 11th September 2019 07:13 AM | அ+அ அ- |

மன்னார்குடியில் செயல்பட்டு வரும் ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில், திங்கள்கிழமை ஜேசிஐ வார விழா தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஜேசிஐ மன்னை தலைவர் எம்.வி.வேதா முத்தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் தலைவர் ஜி.கலைச்செல்வன் தேசியக் கொடியையும், அமைப்பின் கொடியை முன்னாள் மண்டலத் தலைவர் வி.எஸ்.கோவிந்தராஜன் ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஜேசிஐ கோட்பாடுகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை முன்னாள் தலைவர் எஸ்.ராஜகோபாலன் வெளியிட்டார். இதேபோல், மன்னார்குடி மணிமேகலை நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் ஜெ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைப்பின் முன்னாள் தலைவர் ஜி.செல்வகுமார் பல் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார்.
இதில், மன்னார்குடி ஆர்.கே.எஸ். பல் மருத்துவமனை மருத்துவர் ஆர்.கே.சதீஷ்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டு,250 மாணவர்களுக்கு பல் சிகிச்சை அளித்து, குறைபாடுகளைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், திட்ட இயக்குநர் எம்.முகமது பைசல், வார விழா திட்டத் தலைவர் எம்.சி.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ரத்தவகை கண்டறியும் நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜி.சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் திருவாரூர் பாலாஜி ரத்த பரிசோதனை நிலையத்தின் இயக்குநர் ஏ.ராமன் தலைமையில், மாணவ, மாணவிகளுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டு, ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை தொழில்நுட்ப இயக்குநர் ஆர்.அபுபக்கர் விளக்கினார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்கள் எஸ்.எஸ்.தனபால், எஸ்.ராஜன், சங்க செயலர் கே.வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.