என்எஸ்எஸ் முகாம்: சிறப்புப் பட்டிமன்றம்
By DIN | Published On : 29th September 2019 05:57 AM | Last Updated : 29th September 2019 05:57 AM | அ+அ அ- |

திருக்குவளை அருகே உள்ள சூரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாமின் 5-ஆம் நாளான சனிக்கிழமை நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்களின் 7 நாள் சிறப்பு முகாமில், திருவாரூர் ரோட்டரி கிளப் ஆஃப் சோழா இணைந்து நடத்தும் பனை விதை விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, வாழ்வில் துணை நிற்பது உறவினர்களா? நண்பர்களா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டி மன்றம் நடைபெற்றது. பள்ளி ஆட்சிமன்றக்குழு தலைவர் அ. மனஅழகன், பள்ளி செயலர் ஸ்ரீதேவி மனஅழகன் மற்றும் இணைச் செயலர் ம. எழில்நிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர்கள் கோ.சக்கரவர்த்தி மற்றும் ஜி. இராசாராமன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நிகழ்ச்சியில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.ஆர். ராஜேந்திரன், மாணவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.