ஏ.வி.சி. கல்லூரியில் என்.எஸ்.எஸ். தின விழா
By DIN | Published On : 29th September 2019 06:03 AM | Last Updated : 29th September 2019 06:03 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் என்.எஸ்.எஸ். தின விழா கல்லூரியின் வேலாயுதம் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் தலைமை வகித்து பேசியதாவது: என்.எஸ்.எஸ். மாணவர்கள், தங்கள் பொறுப்புகளையும், கடைமைகளையும் உணர்ந்து சமூகத்திற்கு நல்ல பல சேவைகளை செய்து, நாட்டிற்கும், பெற்றோர்களுக்கும், கல்லூரிக்கும் நற்பெயரை பெற்றுத் தரவேண்டும். சமுதாயத்தை ஆற்றல் மற்றும் ஆரோக்கியம் உள்ளதாக மாற்றக் கூடிய வலிமை மாணவர்களின் கரங்களில்தான் உள்ளது. இன்றைய மாணவர்கள்தான் வருங்கால இந்நியாவின் வளமான எதிர்காலம் என்றார்.
என்.எஸ்.எஸ். திட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.யமுனா, திட்ட அலுவலர்கள் என்.சரவணன், எஸ்.ஜெயக்குமார், எம். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக வணிகவியல் மற்றும் தாவரவியல் துறைப் போராசிரியர்கள் ஜி.கார்த்திகேயன், டி.எம்.சதீஷ்கண்ணன் ஆகியோர் பங்கேற்று முதலாமாண்டு என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுமார் 300 பேருக்கு புத்தாக்க பயிற்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் எம்.விஜயலெட்சுமி, எஸ்.செளந்திரநாயகி, பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்
செய்திருந்தனர்.