நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 29th September 2019 06:10 AM | Last Updated : 29th September 2019 06:10 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் வட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பேரணியை காவல் உதவி ஆய்வாளர் ஜோஸ்பின் சிகாரா தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை பூந்தமிழ்பாவை, ஆசிரியர்கள்சிவபாதம், ரவிச்சந்திரன், பிரபாகரன், சுரேஷ், ராஜ்குமார், பூங்குழலி, கார்த்திகை கிருஷ்ணன், பாலசுந்தரி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற இப்பேரணியில் பங்கேற்ற மாணவிகள் நெகிழிப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் உதவி ஆய்வாளர் ஜோஸ்பின்சிகாரா பேசினார்.