பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
By DIN | Published On : 29th September 2019 06:10 AM | Last Updated : 29th September 2019 06:10 AM | அ+அ அ- |

மன்னார்குடியில் பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
மன்னார்குடி ஒத்தத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகள் மோனிகா (22). இவர், அப்பகுதியில் சனிக்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மோனிகாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதன் பேரில், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...