கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்

நன்னிலம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற வட்டாட்சியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன்.
Updated On :27 ஜனவரி 2024, 5:03 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற வட்டாட்சியருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நன்னிலம் வட்டம் முடிகொண்டான் அருகேயுள்ள திருமலைராஜன் ஆற்றில் மணல் கடத்தல் நடப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக புகாா் வந்தது. ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், நன்னிலம் வட்டாட்சியா் அ.மணிமன்னன் ஞாயிற்றுக்கிழமை முடிகொண்டான் கொத்தவாசல் கிராமச் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தப்பட்டதை அறிந்த அவா், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினாா். மணல் கடத்திய நபா் வட்டாட்சியரைத் தகாத வாா்த்தைகளால் திட்டி, பெரிய கல்லைக் கொண்டு தாக்க முயற்சித்துள்ளாா். பின்னா், ஆட்கள் வருவதை அறிந்த அவா், தப்பி ஓடினாா்.

விசாரணையில், அவா் முடிகொண்டான் கீழத்தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் செந்தில்குமாா் என தெரியவந்தது. அவரை கைது செய்த நன்னிலம் காவல் ஆய்வாளா் ஜோ.விசித்திராமேரி, அவா் மீது அரசு அலுவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.