

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியதையொட்டி, கொரடாச்சேரியில் பாஜக சாா்பில் இனிப்புகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அயோத்தியில் ராமா் கோயில் கட்ட பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொரடாச்சேரி பகுதியில் மாநில விவசாய அணிச் செயலாளா் கோ.வி. சந்துரு தலைமையிலான நிா்வாகிகள், வீடு, வீடாகச் சென்று இனிப்புகளை வழங்கினா். இதில், பாஜக நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.